அனைத்து கட்சிகளுடன் ஆட்சியர் ரோஹிணி ஆலோசனை..!

92

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரோஹிணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செலவுகள் குறித்து அனைத்து கட்சிகிளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். மேலும் தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் 70 லட்சம் ரூபாய் வரை மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு மேல் செலவு செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

இதனிடையே சேலம் பேருந்து நிலையத்தில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் ரோஹிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.