மியான்மரில் இந்துக்கள் மீதும் தாக்குதல் | நூற்றுக்கணக்கானோர் இந்துக்கள் படுகொலை ..!

467

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் சிறுபான்மையினராக வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது 5 ஆண்டுகளாக அந்நாட்டு புத்த மத அடிப்படைவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்து வந்த சிறுபான்மையின இந்து மக்கள் மீது புத்தமதத்தினர் மற்றும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நாட்டை விட்டு அதிகளவில் வெளியேறும் இந்துக்கள், இந்திய அரசு தங்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.