ரோஹிங்கியா முஸ்லீம்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..!

252

ரோஹிங்கியா முஸ்லீம்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உடமைகளை இழந்த ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா இன முஸ்லீம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி மத்திய அரசு அவர்களை வெளியேற்ற முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அகதிகளின் மனித உரிமை சார்ந்த நலனுக்கும் அளிக்க வேண்டும் என சுட்டிக் காட்டினர். நவம்பர் 21ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகள், மத்திய அரசு ரோஹிங்கியா இன அகதிகளை வெளியேற்ற முயற்சிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.