ரோஹிங்யா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
மியான்மரில் ரோஹிங்யா இனத்தினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் கலவரம் பாதித்த பகுதிகளிலிருந்து ரோஹிங்கியா இனத்தினர் அகதிகளாக வெளியேறி வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரக்கைன் மாவட்டத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு ஒன்று வங்கதேச கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 37 பேர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.