சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்

178

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதினார்.ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய ரோஜர் பெடரர்,6க்கு 3 , 6க்கு 1 மற்றும் 6-க்கு4 என்ற செட்கணக்கில் வென்று விம்பிள்டன் பட்டத்தை தட்டி சென்றார். 11 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஜர் பெடரர், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக வென்ற வீரர் என்ற சாதனையையும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 19 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் 36 வயதை நெருங்கும் ரோஜர் பெடரர், விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றதால், மிக அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்க டென்னிஸ் வீரரான அர்தர் ஆஷ், 32 வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்துள்ளது.