இங்கிலாந்தில் 10 மீட்டர் உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள நகரும் எந்திர மனிதன் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

205

இங்கிலாந்தில் 10 மீட்டர் உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள நகரும் எந்திர மனிதன் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் மற்றும் வெஸ்ட் டிவோன் மைனிங் பகுதி யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன பட்டியலில் கடந்த 2006 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதன் 10 வது ஆண்டை கொண்டாடும் வகையில் 10 மீட்டர் உயரத்திற்கு இந்த எந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் பார்வைக்காக டிவோன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த நகரும் எந்திர மனிதன் கைகளை விரித்தபடியும், கண்களை சிமிட்டியும் பார்வையாளர்களை அசத்தியது.