ஜப்பான் மருத்துவமனையில் முதியவர்களுக்கு உடற் பயிற்சி கற்றுக்கொடுக்கும் ரோபோ ..!

1072

ஜப்பான் மருத்துவமனையில் ரோபோ ஒன்று முதியவர்களுக்கு உடற் பயிற்சி கற்றுக் கொடுத்து வருகிறது.
மனித உணர்வுகளை பிரதிபலிக்கும், ஹியூமனாய்டு வகையை சேர்ந்த இந்த ரோபோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் கலந்துரையாடுகிறது. முதியவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளையும், உடற்பயிற்சி முறைகளையும் இந்த ரோபோ கற்றுத் தருகிறது. தலைநகர் டோக்கியோவில் செயல்பாட்டில் உள்ள இந்த வகை ரோபோக்கள் விரைவில் ஜப்பானின் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவ சேவை சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.