தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

298

நெல்லையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால், தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தெற்குபனவடலி பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் மூர்த்தி, சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 92 சரவன் நகை, 2 கிலோ வெள்ளி, 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.