கள்ளக்குறிச்சியில் நகைக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி, சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

269

கள்ளக்குறிச்சியில் நகைக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி, சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கடை வீதியில், முருகன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சௌந்திரபாண்டியன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும், இரவு கடையை பூட்டி விட்டு, சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை உரிமையாளர் வீட்டில் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடை ஊழியர்களை வழிமறித்து, அரிவாளால் வெட்டி, அவர்களிடமிருந்த தங்க நகைக்களை பறித்துச் சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில், காயமடைந்த சௌந்திரபாண்டியனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.