ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு | வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு ..

453

ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால், வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, திருமண மண்டபம், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியிருந்தால், மாலை 5 மணிக்கு மேல் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தொகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து, அமைச்சர்கள் பாண்டியராஜன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நேற்று வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.