ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து லக்கானியுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

584

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி ஆலோசனை நடத்தினார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தநிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதனும் ஆலோசனையில் கலந்து கொண்டார். தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணி, வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.