இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

228

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன. எதிர் கட்சிகளின் தொடர் புகாரையடுத்து, தேர்தல் ஆணையம் அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் கண்காணிப்பு பணிக்கென 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 கம்பெனி துணைராணுவ படையினர் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில், இரவு, பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 7 கம்பெனி துணை ராணுவ படைகளும் விரைவில் சென்னை வந்தடையும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.