ஃபெப்சி திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

356

ஃபெப்சி திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று அழைக்கப்படும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் குறித்த மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், 23 அமைப்புகளின் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயார் என தயாரிப்பாளர்கள் கூறியதால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்ததாகவும், நாளை முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பணிபுரிவார்கள் என்றும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.