ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்!

424

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் நடிகர் விஷால்.
தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள அவர்,
நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
மதுசூதனன், மருதுகணேஷ், தினகரனை எதிர்த்து விஷால் களம் இறங்குகிறார்.
விஷாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவிப்பார் என கூறப்படும் நிலையில்
விஷாலுக்கு எதிராக இயக்குனர் அமிர், தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரசிகர்கள், நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டதால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.