ஆர்.கே.நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், மூன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல்!

360

ஆர்.கே.நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், மூன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்.கே. நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட மூன்றரை லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்தவர் திண்டிவனத்தை சேர்ந்த சின்ராஜ் என்பதும், விழுப்புரத்தில் அடகு கடை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.