ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு-தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை!

1761

ஆர்.கே.நகரில் தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார் வருவதால், இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் 21-ம் தேதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுசாமி மாற்றப்பட்டு, பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்திடம்
தேர்தல் பார்வையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளதால் ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்தார். கடந்த முறையும் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.