ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா-மு.க.ஸ்டாலின்!

657
tamil nadu

ஆர்.கே.நகரில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிரிவித்தார். ஆளுங்கட்சியினருக்கு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் துணை போவதாக சாடிய மு.க.ஸ்டாலின், பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுங்கட்சியினர் 100 கோடி ரூபாய் வரை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.