ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி 2 கம்பெனி துணை ராணுவ படை வருகை !

414

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்த 2 கம்பெனி துணை ராணுவ படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இம்மாதம் 21 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மேலும் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வந்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில், 272 வீரர்களும் துப்பாக்கி ஏந்தியபடி தங்களது ரோந்து பணியை தொடங்கியுள்ளனர். இதே போன்று 10 கம்பெனி ராணுவ படையினர் விரைவில் சென்னை வர இருக்கின்றனர்.