ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவு!

465

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைவதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து, அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் உதயகுமார் ஆகியோர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.