ஆர்.கே. நகரில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை.!

269

ஆர்.கே. நகரில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை.
கடந்த முறை ஆர்.கே. நகரில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் போட்டியிட்ட தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தமுறை, தினகரன் உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு கோரி இருந்தனர். இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொப்பி சின்னத்தை பதிவு செய்த மூன்று கட்சிகள் கோரின. தினகரன் சுயேச்சை வேட்பாளர் என்பதால், அவருக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.