ஆர்.கே.நகரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு !

398
Chennai: Workers readying the EVMs for R K Nagar constituency bypolls, in Chennai on Wednesday. PTI Photo by R Senthil Kumar (PTI4_5_2017_000249B)

ஆர்.கே.நகரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் மாலை 5 மணிக்குள் குலுக்கல் முறையில் சின்னங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 21 -ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தொப்பி சின்னத்திற்காக 25 பேரும், இரட்டை மின் கம்பத்திற்காக 24 பேரும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் மாலை 5 மணிக்குள், குலுக்கல் முறையில் சின்னங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.