ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் -31 ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…!

162

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் -31 ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு
ஒரே கட்டமாக நவம்பர் 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி செய்தியாளர்களை சந்தித்தார். இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 9 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 18 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் ஏ.கே. ஜோதி கூறினார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார். டிசம்பர் 31 -ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.