ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது..!

278

ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.