ஆர்.கே. நகர் தொகுதியில் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு!

455

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதியில் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகரில், முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுப் பார்வையாளராக கம்லேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவலர்கள் மற்றும் சிறப்பு காவல்படையினர் இணைந்து, மிண்ட் மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் 11 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர். தொகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கட்சிக் கொடி, சின்னங்களை வாகனங்களில் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.