ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ!

336

ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திருப்பூர் சிக்கண்ண அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் கவலையில்லை என்று கூறினார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியாலும், ஆளுங்கட்சி என்பதாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.