ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 62 பேர் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

153

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 62 பேர் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதியுடன் முடிவடைந்தது. ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ. தீபா உள்பட மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உட்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 82 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு, மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வாபஸ் பெற்றனர். மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, 62 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.