கல்விக்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும் : நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

355

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போல் கல்விக்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடும் இளைஞர்கள் மத்தியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி எழுச்சியுரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலக பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் தமிழர்களின் போராட்டம் இடம் பிடித்துள்ளது என்றார். ஜல்லிக்கட்டோடு இந்த போராட்டத்தை நிறைவு செய்து விடாமல், ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என, அவர் கேட்டுகொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் மாதம் பள்ளிகளில் நன்கொடை மற்றும் அதிக கட்டணம் வசூலித்து கல்விக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக இதே போல் வீதியில் இரங்கி மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் இந்திய திரைப்பட டி.வி. சண்டை பயிற்சி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை, வடபழனியில், தென் இந்திய திரைபட டி.வி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் அமையான வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் தியாகராஜன், மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ் உணர்ச்சியூட்டும் வகையில் அமைதி போராட்டம் நடத்தி வருவதாகவும், பீட்டாவை இந்தியாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்றார்.