உலக முழுவதும் பயணம் செய்து ரியோ நகரை வந்தடைந்த ஒலிம்பிக் தீபத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

202

உலக முழுவதும் பயணம் செய்து ரியோ நகரை வந்தடைந்த ஒலிம்பிக் தீபத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி கோலகலமாக தொடங்க உள்ளது. 17 நாட்கள் நடை­பெறும் இந்த விளையாட்டு திரு­விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பிரேசில் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் மலைகள், காடுகள், கடல்கள் என 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக ரியோ நகரை வந்தடைந்தது. முக்கிய சாலை வழியாக எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரியோ நகருக்கு வந்தடைந்துள்ள ஒலிம்பிக் தீபம், தொடக்க விழா நடைபெறும் மராக்கான விளையாட்டு அரங்கத்திற்குள் வரும் 5 தேதி கொண்டு செல்லப்படுகிறது.