கட்சி பணியில் ஈடுபட டி.டி.வி.தினகரனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

321

கட்சி பணியில் ஈடுபட டி.டி.வி.தினகரனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டி.டி.வி.தினகரனை நாங்கள் நீக்க வில்லை என்று மறுத்துள்ளார். இந்நிலையில், தினகரனை ஒதுக்கி வைப்பது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தது அவரின் சொந்த கருத்து என கூறிய திண்டுக்கல் சீனிவாசன், தினகரனே தான் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி கொண்டார் என தெரிவித்துள்ளார். மேலும் கட்சி பணியில் ஈடுபட தினகரனுக்கு முழு உரிமை உள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.