மீண்டும் நிதி அமைச்சராக அருண் ஜேட்லி..!

252

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக ஓய்வெடுத்து வந்த அருண் ஜேட்லி மத்திய நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

அருண் ஜேட்லிக்கு கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது இதனால் அவர் ஓய்வெடுத்து வந்ததார்.இதையடுத்து ஜேட்லி கவனித்து வந்த நிதி மற்றும் கார்ப்பரேட் நலத் துறைகள், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், அருண்ஜேட்லி கவனித்து வந்த நிதி மற்றும் கார்ப்பரேட் துறைகள் பிரதமரின் பரிந்துரைப்படி மீண்டும் அவரிடமே ஒப்படைக் கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட காலக்கட்டத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலையேற்றம் என மத்திய அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில், ஜேட்லி மீண்டும் நிதி அமைச்சராக பணியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.