பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றது

152

பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றது
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ,மாணவிகளுக்கு ஜூலை மாதத்திலும், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் துணைத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.