ரிசர்வ் படை வீரர்கள் தேர்வு: பிரதமர் மோடி பெயரில் அடையாள அட்டை! விசாரணைக்கு உத்தரவு!!

204

லக்னோ, ஜூலை, 22–
மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தேர்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் தேர்வு கடந்த ௧௫–ந் தேதி நடந்தது. இதில் பங்கேற்றோர்களுக்கு தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் வேண்டும் என்றே பிரதமர் மோடி பெயரில் மோசடியாக அடையாள அட்டையை வழங்கி உள்ளனர். அவரது தேர்வு எண்.௨௪௩௦௦26090 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் புகைப்படமும் தெளிவாக இடம்பெற்றுள்ளது. பிறந்த தேதி ௧௮.௧௦.௯௨ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியின் தந்தை பெயர் ‘ராரேந்திர மோடி’ என்றும் அவர் பிறந்த ஊர் அமிர்தசரஸ் அருகே உள்ள சாம்ராய் கிராமம் என்றும் கண்டபடி விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த அடையாள அட்டை குறித்த விவரங்கள் சி.ஆர்.பி.எப். இணைய தளத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்த மோசடி வேலையை செய்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்த தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
புட்நோட்
பிரதமர் மோடி பெயரில் அவரது புகைப்படத்துடன் சி.ஆர்.பி.எப். தேர்வுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள காட்சி.