இனப்பிரச்சினை தீர்வு காண புதிய அரசியல் சாசனம் நிறைவேற்ற வேண்டும் என இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!

379

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே, மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இலங்கை அரசு தரப்புடன் ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் விஜய் கேசவ் கோகலே சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது, இனப்பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனத்தை இலங்கை அரசு இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புகளை பெற, தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.