தலைநகர் டெல்லியில் வரும் 26 ஆம் தேதி குடியரசுத் தினவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி இராணுவ வீரர்கள் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தினவிழாவிற்கான கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை இப்போதே கலைகட்டத்துவங்கி உள்ளது. இதற்காக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் 18 ஆம் தேதி முதல் விமானப் படை வீரர்களின் ஒத்திகைக்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் வானில் பறக்க, இந்திய விமான நிலைய ஆணையம் தினமும் 100 நிமிடங்கள் தடை விதித்துள்ளது. 9 நாட்களுக்கு காலை 10.35 மணி முதல் பகல் 12.15 மணி வரையில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.