சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

194

சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது போலீசாரைக் கண்டதும், கடத்தல் கும்பல், கற்களைக் கொண்டும், கோடாரியாலும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காவலர் திலிப்குமார் காயமடைந்துள்ளார். இதனையடுத்து போலீசார் 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடத்தல் தொடர்பாக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் தப்பியோடிய 18 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் 9 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையுள்ள செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.