ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிவப்பு கட்டிடம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..!

695

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, கிழக்கிந்திய கம்பெனி மூலம் கடல்வழி மார்கமாக வாணிபம் செய்து வந்தனர். இதற்கு தலைமை நிர்வாக அலுவலகம் கடலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டது. கிளைவ் என்பவரால், 1756 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிவப்பு மாளிகையில், 1801-ம் ஆண்டுமுதல், அரி டைலர் முதல் ஆட்சியராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை, 60 ஆட்சியர்கள் இந்த மாளிகையில் ஆட்சி நடத்தி உள்ளனர்.இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல் பட்டு வந்தது.பின்னர் 1993-ம் ஆண்டு, தென்னாற்காடு மாவட்டம், கடலூர், விழுப்பும் என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னர், இந்த சிவப்பு மாளிகை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட பின்னர் பழைய அலுவலகமான இந்த சிவப்பு மாளிகை பராமரிப்பு இன்றி புதர்கள் மண்டி, சிதிலம் அடைந்து காட்சி அளிக்கிறது.இதேபோன்று, இப்பகுதியில் உள்ள அருங்காட்சியகமும் உரிய இட வசதி இன்றி பாண்டிய, பல்லவர் கால புராதான சின்னங்கள், கல்வெட்டுகள், கற்சிலைகள் நடைபாதையில் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.இந்த பராதான சின்னங்களை சேகரித்து, அந்த பொருட்களை சிவப்பு மாளிகையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதும், இதனை முறையாக சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.இத்தனை வரலாற்று சிறப்பு மிக்க சிவப்பு மாளிகை மற்றும் புராதான சின்னங்களை பராமரித்து, பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், எதிர் கால சந்ததியனருக்கு வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும் என்பதுமே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.