4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய இளைஞர்…!

286

பாரீசில் 4-வது மாடியில் தொங்கிய குழந்தையை, ஸ்பைடர் மேன் பாணியில் மாலி நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டிற்கு வேலை தேடி வந்தவர், மாலி நாட்டை சேர்ந்த முகம்மது கசாமா. இவர், பாரீஸ் நகரில் உள்ள ஒரு வீட்டின், 4வது மாடி பால்கணியில் தவறி விழுந்து தொங்கியபடி இருந்த குழந்தையை, ஸ்பைடர்மேன் பாணியில் சுவரில் ஏறி காப்பாற்றியுள்ளார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் தைரியமாக சுவரில் ஏறி குழந்தையை காப்பாற்றிய கசாமாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.