பிரதமர் மோடி தான் சுயநலவாதி – ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

390

பிரதமர் மோடி தான் சுயநலவாதி என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதியை எதிர்ப்பார்த்து காத்திருந்த ஆந்திர மக்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருப்பதாக் வேதனை தெரிவித்தார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 29 முறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து இருப்பதாக சுட்டிக் காட்டிய சந்திரபாபு நாயுடு, பிரதமரின் பேச்சு வலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். இதனிடையே பிரதமர் மோடி தான் சுயநலவாதி என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.