நாட்டில் உள்ள 64 வங்கிகளில் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய் கேட்பாரற்று கிடக்கிறது – ரிசர்வ் வங்கி

610

நாட்டில் உள்ள 64 வங்கிகளில் உள்ள 3 கோடி கணக்குகளில் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று கிடப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏழாயிரத்து 40 கோடி ரூபாய் கேட்பாரற்கு கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ஆயிரத்து 262 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரத்து 250 கோடி ரூபாயும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளான ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இண்ட், கோட்டாக் மகேந்திரா, யெஸ் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகளில் 824 கோடி ரூபாய் கேட்பாரற்று உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மற்ற தனியார் வங்கிகளில் 592 கோடி ரூபாயும், ஆக மொத்தமாக, ஆயிரத்து 416 கோடி ரூபாய் தனியார் வங்கிகளில் கேட்பாரற்கு இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுதவிர, வெளிநாட்டு வங்கிகளில் 332 கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.