மகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்

260

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடோவும், அவர் மனைவியும், பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில், அவரின் அக்கா மற்றும் அப்பா, காங்கிரசில் இணைந்து உள்ளனர்.

கட்சி தாவல்கள் என்பது எல்லா கட்சிகளிலும், எல்லா மாநிலங்களிலும் நடைபெறும் வழக்கமான ஒன்றுதான். இந்த கட்சி தாவல், பல இடங்களில், குடும்ப தாவல்களாக அமைந்து உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும் சூழலும் உருவாகிறது. இந்த கட்சி தாவலுக்கு உதாரணமாக, சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா வின் குடும்பத்தை கூறலாம். ரவீந்திர ஜடேஜாவும், அவர் மனைவி, ரிபாவாவும், சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, பா.ஜ.,வுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். gallerye_020805825_2258931

ஆனால் திடீர் திருப்பமாக, ஜடேஜாவின் அக்கா, நைனாபாவும், அவரது அப்பா, அனீருத்தீன் சிங்கும், படேல் இன இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் நடத்திய, ஹர்திக் படேல் முன்னிலையில், காங்கிரசில் இணைந்துள்ளனர். இந்த தாவல், கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, குஜராத் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. மகனும், மருமகளும் பா.ஜ.விலும், அக்காவும் அப்பாவும், காங்கிரஸ் ஆதரவாளராகவும் மாறியுள்ளதே, அந்த மாநில மக்களின் பெரும் விவாதமாக தற்போது உள்ளது.