போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ரவிதேஜா உட்பட 12 தெலுங்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகத்தினர் நேரில் ஆஜராகி விளக்கம்.

359

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ரவிதேஜா உட்பட 12 தெலுங்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகத்தினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கானாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த செல்போனில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போதை பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர்கள் 6 பேர் உள்பட தெலுங்கு திரையுலகைச்சேர்ந்த 15 பேர் அமலாக்க துறை பிடியில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து, தெலுங்கு முன்னணி நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப் மற்றும் நடிகைகள் சார்மி கவுர், துணை நடிகை முமைத் கான் உட்பட சினிமாட்டோகிராபர் சியாம் கே. நாயுடு, பாடகர் ஆனந்த கிருஷ்ணா நந்து, ஆர்ட் டைரக்டர் சின்னா என். தர்மாராவ் உட்பட 12 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்க துறை இயக்குர் அகுன் சபர்வால் தெரிவித்துள்ளார். வரும் 19 மற்றும் 27-ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகுமாறு அமலாக்க துறை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சில நடிகர்கள் தங்கள் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதி கோரியுள்ளனர், ஆனால் இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரையுலகத்தினருக்கு தொடர்பு இருப்பது கண்டு தெலுங்கு திரைத்துறையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.