முத்தலாக் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்வதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது-மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

958

முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்கான மசோதாவை தாக்கல் செய்து, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராக, சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் புதிய சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் முத்தலாக் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
இந்த சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்படுவதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்படாமல் உருவாக்கப்பட்டள்ள இந்த சட்ட முன்வடிவை, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு முதலில் அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
triple-talaq-pti-650_650x400_71503471727