கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்..!

314

நெல்லை அருகே மூன்றரை டன் ரேசன் அரிசியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்த போலீசார், அதனை சோதனை செய்தனர். அதில் மூன்றரை டன் எடையுடைய ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.