உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

534

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன், 1929-ம் வருடம் பிறந்தார். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பெறுப்பேற்றார். 1988-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் 1994ல் ஓய்வு பெற்றார். நீதிபதியாக இருந்தபோது, மண்டல கமிஷன் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பை இவர் வழங்கியுள்ளார். இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ரத்தினவேல் பாண்டியன், சென்னையில் இன்று மரணமடைந்தார். அவரது உடல், சென்னை அண்ணா நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மிக சிறப்பாக மக்கள் பணியாற்றியதோடு, இயக்க பணியிலும் பாராட்டுதலுக்கு உரிய செயல்களில் ஈடுபட்டவர் ரத்தினவேல் பாண்டியன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.