திருமலை கோவிலில் தொழிலதிபர் ரத்தன் டாடா சாமி தரிசனம்..!

504

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற திருமலை திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு, சிறப்பு தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து கொடுத்து வருகிறது. இந்தநிலையில், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான துணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

தரிசனத்திற்கு பிறகு, தேவஸ்தான உயரதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை அவருக்கு வழங்கினர். திருப்பதியில், டாடா நிறுவனத்துடன் இணைந்து கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கழகத்தை ஆந்திரா அரசு அமைக்கவுள்ளது. இதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ளவதற்காக ரத்தன் டாடா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.