மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து !

295

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவான்டி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் திடீரென்று தீ பிடித்துள்ளது. ஒரு பகுதியில் பற்றிய தீ தொழிற்சாலையின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்து தொழிற்சாலை ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்