பூதாகரமாகியுள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தம்..!

641

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ப்ரான்ஸ் நிறுவனத்துடன், தாங்கள் செய்துள்ள ஒப்பந்தம், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு தெரியாது என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ப்ரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் 126 ரபேல் விமானங்கள் வாங்குவதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இந்தியா விதித்தது. இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அனில் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் ப்ரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, ரபேல் போர் விமானம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து டஸ்ஸாட்டு நிறுவனத்தின் 50 சதவீத முதலீடு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன் பின்னர் வெளியான அறிக்கையில், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 விமானங்கள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காகவே, மோடி அம்பானியை ப்ரான்ஸுக்கு அழைத்து சென்றதாகவும், இதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கமளித்துள்ள, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவன தலைவர் ராஜேஷ் திங்க்ரா, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ப்ரான்ஸ் நிறுவனத்துடன், தாங்கள் செய்துள்ள ஒப்பந்தம், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு தெரியாது விளக்கமளித்துள்ளது.