ராயப்பேட்டையில் மனைவி மற்றும் 3 மகள்களை கொன்றுவிட்டு, தப்பி ஓடிய கணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

183

சென்னை அருகே ராயப்பேட்டை முத்து தெருவில் உள்ள ராஜபகதூர் என்பவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள பூட்டிய வீட்டில் இருந்து பிணவாடை வீசியது. அருகில் உள்ளவர்கள் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அறையில் 4 பெண்கள் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 4 சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த 4 பேரும் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.