படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கு காயம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

222

படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கு காயம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஷங்கரின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதல் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனால் வலியால் துடித்த அவருக்கு படப்பிடிப்பு தளத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்தை உடனடியாக அருகில் உள்ள
தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்தததில் பெரிய அளவில் காயம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்