ராஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் கேப்டன்

342

ராஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், தமிழக அணிக்கு கேப்டனாக அபினவ் முகுந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

84–வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 6–ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2–ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் தமிழக அணியின் கேப்டனாக அபினவ் முகுந்த் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டகாரர் முரளி விஜய், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிசந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளர். தமிழக அணி தனது முதல் போட்டியில் ஆந்திர அணியை எதிர்கொள்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் தொடக்க ஆட்டகாரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது.